பிரேசில் நீதிமன்றம் ரான்சம்வேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டது!
ரான்சம்வேர் தாக்குதல்கள் பல தனியார் நிறுவனங்களைத் தாக்கிய பின்னர், தற்பொழுது சமீபத்தில் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலின் நீதிமன்றம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது.
நேற்று இந்த நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த Video Conference -ல் சில bugs(வைரஸ்கள்) இருந்தது கண்டறியப்பட்டதால், கணினியை சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது Ransomware வைரஸ்கள் இருந்தது கன்றியப்பட்டது.
உடனடியாக நீதிமன்றத்தின் அனைத்து இணையம் தொடர்பான கருவிகளும் துண்டிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட நெட்வொர்க்கில் சைபர் தாக்குதலின் விளைவுகள் குறித்து ஃபெடரல் காவல்துறை விசாரித்து வருகின்றது.
இவை Ransomware வைரசின் அடுத்த பகுதியான RansomwareEx வைரஸ் ஆகும். இந்த வைரஸ் ஜூன் மாதத்தில் செயலில் வந்து பல இடங்களில் பெரிய அளவிலான சைபர் தாகுதல்களை ஏற்படுத்தியது.