பின்வாசல் திருட்டு – Backdoor explained in tamil | Cyberlites
Backdoor explained in tamil
Backdoor என்றால் என்ன? நாம் ஏன் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?
நீங்கள் சொந்தமாக உழைத்து விட்டிற்குள் பொருட்களை சேகரித்து வைத்து இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் பொருட்களை பாதுகாக்க ஒரு பிரமாண்டமான கேட்டிற்குள் நல்ல பூட்டை போட்டு பூட்டி காவலுக்கு ஒரு நாயையும் வளத்து வருகிறீர்கள்.
ஆனால் உங்கள் வீட்டின் பின் புற கதவு மிகவும் மோசமானதாகவும் எளிதில் திறக்கும் படியாக இருக்கும் பட்சத்தில் திருடர்கள் அதன்வழியே வந்து உங்கள் பொருட்களை திருடி செல்வார்கள்.
அப்படித்தான் கணினி மற்றும் கைபேசிகளில் உள்ள உங்கள் தகவல்களை பின்புறம் Backdoor வழியாக வந்து திருடி செல்கிறார்கள். அதுவும் உங்களுக்கே தெரியாமல்.
Backdoor எப்படி செயல்படுகிறது?
Backdoor என்பது தனக்கு சொந்தமான ஒருவரை பின்வழியே அனுப்பி தனக்கு தேவையான தகவலை அவர் வழியே பெற்றுக்கொள்வதாகும்.
ஒரு கணினியில் உள்ள படங்கள் அனைத்தும் வேண்டுமாயின் ஒரு PAYLOAD அல்லது Malicious code ல் அது தொடர்பான CODE களை எழுதி சம்மந்தப்பட்ட கணினியில் நிறுவிவிட்டால் போதும். அது தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை அந்த கணினியின் செயல்பாடு தொடங்கும் பொழுதே தொடங்கிவிடும்.
கணினி பூட்டப்பட்டு இருந்தாலும் செயல்படும்.
நான் தான் எனது கம்ப்யூட்டரை லாக் செய்துவிட்டேனே பிறகென்ன என்றெல்லாம் இருந்துவிட முடியாது. Backdoor ன் வேலையே ஒரு பூட்டப்பட்ட இடத்தில் இருந்து தகவலை எடுப்பதுதான் எனவே உங்கள் கணினி பூட்டப்பட்டு இருந்தாலும் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.
Backdoor தகவல் இழப்பை எப்படி தடுப்பது?
தற்பொழுது வரும் சில Antivirus கள் Malicious code களிடம் இருந்தும் பாதுகாக்கிறது எனவே உங்களுக்கான Antivirus களை தேர்ந்தெடுக்கும் பொழுது Backdoor பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்ளவும்.
வாட்ஸ் ஹேக் பன்றது பத்தி போடுங்க.