கட்டுரைகள்

Captcha-க்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

Captcha என்ற ஒற்றை வார்த்தையை இணையத்தை பயன்படுத்தும் அதீத பேர் அறிந்திருக்கக் கூடும். நாம் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது சில நேரங்களில் புதிதாக ஒரு இணையப் பக்கத்தை அல்லது இன்னும் சில பயன்பாடுகளை நாம் அணுக நினைக்கும்போது நம்முடைய மொபைல் அல்லது கணினித் திரையில் Captcha என்ற வார்த்தைகளோடு சில படங்கள் அல்லது எழுத்துக்களோடு ஒரு சிறிய புகைப்படம் தோன்றக் கூடும் .

நாம் அதனை சரியாக தேர்வு செய்த பின்னரே நாம் நினைத்த ஒன்றை அடைய முடியும். நாம் தவறான உள்ளீடுகளை கொடுக்கும் பொழுது, அந்த கணினி(Bot) நம்மை அடுத்த பக்கத்திற்கு நம்மை அனுமதிப்பதில்லை.

ஏன் இப்படி? சரியான உள்ளீடுகளை கொடுக்கும்பொழுது, நம்மை அனுமதிக்கும் அந்த இயந்திரம் தவறான உள்ளீடுகளை கொடுக்கும் பொழுது ஏன் நம்மை அடுத்த தளத்திற்குள் செல்ல அனுமதிக்க வில்லை ? எதற்காக இப்படி ஒரு செயல் நடக்கின்றது?

இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

Captcha என்பது மனிதர்கள் இணையத்தை பயன்படுத்துபவர்கள் என்பதைத் தாண்டி, ஒரு கணினி அல்லது ஒரு சாதனம் இணையத்தை அணுகக்கூடாது  என்று உருவாக்கப்பட்ட ஒரு செயல்முறை ஆகும். இதில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள், படங்கள் அல்லது எழுத்துக்களை மனிதர்களால் மட்டுமே உடனுக்குடன் புரிந்து கொள்ள முடியும்.

  1. உடனுக்குடன் தோன்றும் நீட்டப்பட்ட அல்லது மிக நெருக்கமாக ஒட்டியுள்ள எழுத்துக்கள் (Closingtexts),
  2. மாடிப் படிக்கட்டுகள் (Stairs),
  3. புகை வெளியிடக் கூடிய வீட்டின் அமைப்புகள் (Chimneys),
  4. சாலையின் குறுக்கே நடக்கக்கூடிய இடங்கள் (Cross walks),
  5. மலைகள் (Mountain or Hills).

பேருந்துகள்(Bus) மற்றும் இன்னும் சில பொருட்களை கணினி அல்லது பிற ரோபோட், bot போன்ற சாதனங்களால் உடனுக்குடன் அடையாளம் காண முடியாது.

அதிக அளவில் ஒரு இணையத்தின் பக்கத்தை அல்லது அந்த இணையதளத்தை Bot-கள் பயன்படுத்தக் கூடாது என்பதை நடமுறைப்படுத்தவே இந்த Captcha-கள் அதிக அளவில் பயன்படுத் தப்படுகின்றன .

மேலும் அதிக சிரமம் இன்றி இணையப் பயன்பாட்டை மேற்கொள்ளவும் இந்த Captcha-கள் பயன்படுத்தப்படுகின்றன.

                  how to work captcha

ஆனால், இந்த Captcha-க்கள் உருவாக்கப்பட்டதிலிருந்து கணினிகளை கணினிகளே அதாவது இயந்திரங்களை இயந்திரங்களே புரிந்து கொள்ளக் கூடிய தொழில் நுட்பமும் உருவாக்கப்பட்டுள்ளது  என்பது கூட ஒரு பழமையான செய்திதான்.

கணிணி போன்ற சாதனங்களின் மொழியானது மனிதர்களின் மொழியைத் தாண்டிய நிரல்கள்(Coding) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு சின்னஞ்சிறு தொழிநுட்பம் தான் இந்த Captcha அல்லது Recaptcha ஆகும்.

இந்த Captcha-க்களைக் கொண்டு ஹேக்கர்களும், தங்களது வேலைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றனர் என்ற செய்தியை உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம். இந்த Captcha- க்கள் மூலம் ஹேக்கர்களும் அவர்களின் வேலைய காண்பிக்கின்றனர். எவ்வாறு இதை நிகழ்த்துகின்றனர் என்பதை அடுத்த தொடர்ச்சியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *