இணையதள குற்றங்கள்

Linked in, Facebook- ஐ தொடர்ந்து ட்விட்டரின் தகவல்களும் டார்க் இணையத்தில் விற்பனை!

சில தினங்களுக்கு முன் Linked in மற்றும் பேஸ்புக் தகவல்கள் தொடர்ச்சியாக ஹேக்கர்களால் டார்க் இணையத்தில் விற்பனை நடைபெற்றதை  அடுத்து தற்பொழுது 7 கோடி பயனர்களின் தகவல்கள் டார்க் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இத்தாலிய நாட்டின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Swascan நிறுவனம் இந்த விற்பனையை கண்டறிந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விற்பனைக்கு வந்த தகவல்களில் ட்விட்டர் பயனர்களுடைய முதல் பெயர்(First name), கடைசி பெயர்(Last name), ட்விட்டர் கணக்கு(Account), G-மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகளும் அடங்கும்.

டார்க் இணையத்தில் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் கசிந்த சில சில நாட்களுக்குள் இது மறுபடியும் இரண்டாவது முறையாகும். சமீபத்தில் பேஸ்புக்கின் 533 மில்லியன் பதிவுகளின் தரவுகளின் விற்பனையும் தொலைபேசி எண்களை உள்ளடக்கியதாகும்.

        Twitter Data Leaked the Dark Web

பேஸ்புக் ஸ்கிராப்பிங்கிற்கு அவர்கள் பயன்படுத்திய ட்விட்டர் தரவை ஹேக்கர்கள் அதே முறையை  பயன்படுத்தி ட்விட்டர் தரவை எடுத்திருக்கலாம் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிப்புக்கு பயன்படுத்தியிருக்கலாம்  என்று கூறப்படுகின்றது. இந்த தரவு பேஸ்புக் விற்பனையுடன்  தொடர்புடையது என்பதும் சாத்தியமாகின்றது.

     Twitter Hacked and data leaked

இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் நிகழாமல் தடுக்க முடியாது. இருப்பினும், கணக்குகளைப் பாதுகாக்க இரண்டடுக்கு பாதுகாப்பு(Two Step Verification) அங்கீகாரத்தைப் Swascan அறிவுறுத்துகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *