Whatsapp பயனளர்களுக்கு புதிய அறிவிப்பு..!
வாட்ஸ் அப்பில் தேவையற்ற குழுக்களை நீக்க உதவும் புதிய அம்சம் விரைவில்…!
உலக அளவில் வாட்ஸ் ஆப் பைனானவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது வாட்ஸ் அப் மெசேஜை தளத்தில் பயனாளர்கள் பயன்படுத்தப்படாத ஏதேனும் குழுக்கள் இருந்தால் அவற்றை நீக்குவதற்கு விரைவில் புதிய அம்சம் கொண்டுவரப்பட உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போனின் ஸ்டோரேஜ் சேமிக்கலாம் என்றும் அந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே உலக அளவில் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. whatsapp தினம் தோறும் செய்திகளை அனுப்புவதற்கும் ஆடியோக்களை பதிவு செய்து அனுப்புவது மற்றும் வீடியோ அனுப்புவது என்று பல வகைகளில் உதவி செய்து வருகிறது. வாட்ஸ்அப் மெசேஜரில் ஏதேனும் தேவையற்ற குழுக்கள் இருந்தால் அவற்றை எளிதாக நீக்க புதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறியிருக்கின்றனர்.
பொதுவாகவே வாட்ஸ் அப் ஏதேனும் சிறப்பு அம்சங்களை கொண்டு வந்தால் அவற்றை மெட்டா நிறுவனத்தில் அறிமுகம் செய்வது வழக்கம் அந்த வகையில் Expiring குரூப்ஸ் என்ற அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அம்சத்தை கொண்டு தாங்கள் பயன்படுத்தப்படாத குழுக்களை கண்டு அவற்றை தாங்களே நீக்கி கொள்ளலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இது போன்ற பல அம்சங்களை வருங்காலங்களில் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.