ஸ்மார்ட் ஃபோனை விட கம்மி விலையில் Itel Tablet டிவைஸ்..!
கம்மி பட்ஜெட்டில் வந்துள்ளது Itel Tablet
கம்மி பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்பொழுது வந்துள்ளது பெரிய டிஸ்ப்ளே கொண்ட டேப்லெட் Itel pad 1 டிவைஸ், குறைந்த விலையில் பெரிய டிஸ்ப்ளே கொண்ட இந்த டேப்லெட் பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் போனை வாங்க நினைப்பவர்களுக்கு கிஃப்ட்டாக வந்துள்ளது. Itel சீனா நிறுவனம் இப்பொழுது itel pad 1 என்ற டிவைஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அட்டகாசமான தோற்றத்தில் காணப்படும் Itel pad டேப்லெட் பெரிய கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதனுடைய ஆடியோ மற்றும் வீடியோ திறம்பட அமைந்துள்ளது மேலும் 10.1 இன்ச் டிஸ்ப்ளே அமைப்பை கொண்டுள்ளது. இது மட்டும் இன்றி இதனுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் 6,000 mah கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.