சில மணி நேரம் முடங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை
முடங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை
இந்த டிஜிட்டல் உலகத்தில் அவரவர்களுக்கு பிடித்தவாறு அவர் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள்,மெகா சீரியல்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே முதன்மையான நிறுவனமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இருக்கிறது.
முக்கியமாக கிரிக்கெட் போட்டிகளை உடனுக்குடன் நேரலையாக ஒளிபரப்பு செய்வதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முதன்மை வகிக்கிறது என்பதால் மிகவும் பிரபலமான தளமாக வளம் வருகிறது. இவ்வாறு பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை பிப்ரவரி 17 தேதி அன்று சில மணி நேரம் முடக்கப்பட்டது. மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில் இந்த சேவை முடங்கியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியது.