புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது டெலிகிராம்…!
புதிய அப்டேட்களுடன் வந்துள்ளது telegram…!
டெலிகிராம் நிறுவனம் அதன் வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வருகிறது அந்த வகையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல புதிய செயலாளர்களை சேர்க்கும் நோக்கத்திலும் பல புதிய வசதிகளை டெலிகிராமில் ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் பொதுவாக மக்கள் எந்த அளவிற்கு whatsapp பயன்படுத்துகிறார்களோ அதே அளவிற்கு மக்களால் ஈர்க்கப்பட்ட டெலிகிராமையும் பயன்படுத்தி வருகின்றன.
வாட்ஸ் அப்பில் அவ்வப்போது பல புதிய அப்டேட்களை கொடுத்து வருகின்றனர் அதேபோல டெலிகிராம் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்காக பல புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது என்ன புதிய அப்டேட் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1.பேட்டரி பிரச்சனையை சரி செய்வதற்கு பவர் சேவிங் மோட் என்ற அம்சத்தை டெலிகிராம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
2.டெலிகிராமில் நாம் பார்க்கும் வீடியோக்களின் வேகத்தை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் புதிய திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு Granular play speed என்ற பெயர்.