ஆதார் மோசடிகளை தவிர்க்க புதிய பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு..!
ஆதார் மோசடிகளை தவிர்க்க புதிய திட்டம்
ஆதார் மோசடி பல வகைகளில் நடந்து கொண்டிருக்கின்றது இதை தடுப்பதற்கு மத்திய அரசு புதிய பாதுகாப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் கார்டு இந்திய மக்களின் தனித்துவ அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. வங்கி முதல் பல நிறுவனங்களில் ஆதார் கார்டு முக்கியத்துவம் வகிக்கிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் சுட்டிக்காட்டுகிறது.. மேலும் வங்கி பரிவர்த்தனைக்கு முக்கியமாக ஆதார் கருதப்படுகிறது.
பல மோசடி கும்பல்கள் ஆதாரை வைத்தது பல வகைகளில் மோசடி செய்து வருகின்றன இதை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. Two – layered security mechanism என்ற பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இது ஆதார் அட்டை சரி பார்ப்பதன் படி ஆதார வைத்து செய்யப்படும் எந்த ஒரு வேலைக்கும் நமது கைரேகையை அங்கீகரிக்கும் இதன்படி பல மோசடி தொடர்பான முயற்சிகளை கண்டறிகிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தில் ஃபிங்கர் மினுஷியா மற்றும் ஃபிங்கர் இமேஜ்” என இரண்டு முறையில் கைரேகை சரி பார்க்கிறது இதனால் பலவிதமான ஆதார் மோசடிகள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.