கட்டுரைகள்

எட்வர்ட் ஸ்னோடன் ஏன் இவ்வளவு பிரபலம்?

சைபர் உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும் எட்வர்ட் ஸ்னோடனைப் பற்றி! யார் இந்த  எட்வர்ட் ஸ்னோடன்? Tor Browser-ல் இவரைப் பற்றிய செய்திகள் அடிக்கடி ஏன் வெளி வருகின்றது? சைபர் உலகில் இவர் பிரபலம் அடைய என்ன காரணம்?

எட்வர்ட் ஸ்னோவ்டென் 37 வயதான அமெரிக்க குடிமகன் ஆவர். இவர் அமெரிக்காவில் 1983-ஆம் ஆண்டு பிறந்தவர். 1983-ல் பிறந்திருந்தாலும் 2013-ல் தான் உலகம் இவரை அறிந்தது. 2013 ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) ஊழியர் மற்றும் துணை ஒப்பந்தக்காரராக பணியாற்றியபோது தேசிய பாதுகாப்பு முகமை(National Investigation Agency) இலிருந்து  தகவல்களை திருடி அதைப் பிரபலப் படுத்தியதாக இவர் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

இவர் அமெரிக்க புலனாய்வு சமூகத்திற்குள் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். NSA-வின்  கண்காணிப்பு திட்டங்கள் குறித்த தகவல்களை  அமெரிக்க மக்களுக்கு அரசின் விதிமுறைகளை மீறி வெளியிட்டார். எந்தவொரு பொது மேற்பார்வையுமின்றி மற்றும் அமெரிக்க அரசியலமைப்பின் வரம்புகளுக்கு மீறிதாக இது அமைந்தது. டிஜிட்டல் உலகின் மிகப் பெரிய சைபர் பிரச்சனையாக இது உருமாறியது.

ஸ்னோடன் மீது அமெரிக்க அரசாங்கத்தினுடைய சொத்துக்கள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.1917 உளவு சட்டத்தின் கீழ், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் மீதான குற்றங்கள் காரணமாக இவருடைய Passport பலமுறை முடக்கப்பட்டது. ஆனாலும் இவருக்கு ரஷ்யாவில் வரைமுறை இல்லாத நாட்டிற்குள் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இவரின் மீதான குற்றங்களால்  இவர் பிறந்த அமெரிக்காவில் தற்பொழுது இவருக்கு அனுமதி இல்லை!

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *