Uncategorized

End to End Encryption எப்படி செயல்படுகின்றது?

சைபர் பாதுகாப்பில் ஒரு பங்களிப்பை தரக்கூடிய Encryption – ஐ பற்றி நாம் அறிந்திருப்போம். சில நாட்களுக்கு முன்பே Cyberlites இந்த Encryption பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. படிக்க 

    பொதுவாக Encryption என்பது ஒரு தகவலை அனுப்புபவருக்கும் அதனை பெறுபவருக்கும் இடையில் யாரும் பார்க்க முடியாதவாறுlock செய்து அனுப்பப்படுவதாகும்.

End to End Encryption பயன்பாட்டிற்கு முன்பு எப்படி தகவல்கள்  பரிமாற்றப்பட்டது என்பது பற்றி பார்க்கலாம்.

End to End Encryption-ஐப் பற்றி தெளிவாகக் கூற வேண்டும் என்றால் நாம் அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப் பயான்பாட்டினைக் கூறலாம்.  நீங்கள் அனுப்பும் மெசேஜ் ஆனது முதலில் ரவுட்டருக்குச் சென்று, அங்கிருந்து வாட்ஸ்அப் சர்வருக்கு செல்லும். அப்பொழுது நமக்கு காண்பிக்கும் ஒரு அறிகுறிதான் ஒரு டிக் மார்க் ஆகும். சென்ற செய்தி ஆனது வாட்ஸ்அப் சர்வரில் இருந்து இன்னொரு ரவுட்டர் சென்று பெறுபவரை சென்றடையும். அது சர்வரை அடைந்தவுடன் இரண்டு டிக் மார்க் வருகிறது. Client to Router இடையில் உங்களது வாட்ஸ்அப் மெசேஜை மூன்றாவது மனிதரால் ஹேக் செய்ய முடியுமானால் நீங்கள் அனுப்பிய மெசேஜை பெற்றுக்கொண்டு உங்களைப்போலவே மெசேஜை பெறுபவருக்கு அனுப்பமுடியும் என்பது ஒரு வியப்பான உண்மை.

இப்போது End to End Encryption முறையானது எப்படி வேலை செய்கின்றது என்பது பற்றி பார்ப்போம்.

நீங்கள் உங்களுடைய நண்பருக்கு அனுப்பும் செய்தியானது, வாட்ஸ்அப் சர்வர்க்கு சென்று ஒரு Public key கொண்டு Encrypt செய்து நம்முடைய நண்பருக்கு அனுப்பும் அந்தச் செய்தி, அவருக்கு சென்றதும், அவருடைய Private Key கொண்டு Decrypt செய்து செய்தியைப் பார்க்க முடியும் என்பதே இதன் செயல் முறையாகும். இதற்கு இடையில் எந்த ஒரு மூன்றாவது நபராலும்(ஹேக்கர்),  உங்களது மெசேஜை பார்க்கவோ, படிக்கவோ முடியாது. ஏனெனில் நீங்கள் அனுப்பும் செய்தி ஆனது ஒரு Symbol ஆகவோ Binary code ஆகவோ மாறும் அல்லது உங்களுடைய நண்பருக்கு Encrypt ஆகி அவருக்குச்  சென்று Decrypt  ஆகும் என்பதே இதன் தத்துவமாகும். இதனை எளிதில்  வாட்ஸ்அப்-ல் உள்ள  மூலம் chat-ல் சென்று பார்க்க இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *