இணையதள பாதுகாப்பு

Free Wifi என்னும் ஆப்பு?

Public wifi or Free Wifi என்பது பொது இடங்களான விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும்  சில விடுதிகள், மால்கள் போன்றவற்றில் கிடைக்கும் இலவசமாக கிடைக்கும் டேட்டா(Data)  ஆகும். இது பல நேரங்களில் நமக்கு பெரிய பயன்பாடாக இருந்தாலும், இதில் நிறைய ஆபத்துக்களும் இருக்கின்றன.

இலவசமாகக் கிடைக்கும் டேட்டாவை நான் பயன்படுத்திக் கொள்வதில் என்ன பெரிய ஆபத்து இருக்கப் போகின்றது என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் அவசர தேவைக்காக நாம் பயன்படுத்தும் இந்த இலவச wifi தான் பல நேரங்களில் நமக்கு ஆபத்தாக அமைந்து விடுகின்றது. ஒரு ஹேக்கர் அவருடைய நெட்வொர்க்கை இலவசமாகக் கொடுத்து அதன்மூலம் அவர்கள் பயன்படுத்தும் அனைத்து தரவுகளையும் மிக மிக எளிமையாகப் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்.உண்மைதான்! நாம் ஒருவருடைய மொபைல் அல்லாத மற்ற Hotspot-களில் கிடைக்கும் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும் பொழுது நாம் சென்று வரும் நம்முடைய மொபைலின் அனைத்து பகுதிகளையும்(Chat,Browsing,Data Tranfer) அவர்களாலும் எளிதாக பார்க்க முடியும். நெட்வொர்க் வழங்குபவர் மட்டுமல்லாது அந்த நெட்வொர்க்கில் இணைப்பில் இருக்கும் வேறு  ஒருவர் கூட நாம் அந்த wifi-ல் இணைந்து இருக்கும் பொழுது, நம் மொபைலில் எளிதாக ஹேக் செய்துவிட முடியும். இதற்கு (MITM-Attack) என்று பெயர். இதன் மூலம் ஒரு நெட்வொர்க்கில் இணையும் அனைத்து கருவிகளையும்(Devices) ஒன்றாக இணைக்க முடியும். நாம் என்கிரிப்ட் செய்யப்பட்ட சிலவற்றை பயன்படுத்தினாலும் அது முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறிவிட முடியாது.

இதன் மூலம் வைரஸ்கள் Trojan-களை நம்முடைய செல்போன் மற்றும் கணினியில் எளிதாக பரப்பி விட முடியும். அதன் மூலம் நம்முடைய மொபைலில் மென்பொருள் சம்பந்தமான பாதிப்புகளுக்கு உள்ளாக்க முடியும். நாம் ஒரு ஹோட்டல் அறையில் அல்லதுவிடுதி அறையில்  தங்கியிருக்கும் பொழுது கிடைக்கும் Free wifi-ஐ பயன்படுத்துகின்றோம் என்றால் நாம் ஒரு பாதுகாப்பில்லாத வலைத்தளத்தை பயன்படுத்துகின்றோம் என்று அர்த்தம்.

இதனை பாதுகாப்பாக பயன்படுத்த சில வழிகள்?

இதில் இருந்து பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்? நம்முடைய வங்கிக் கணக்கு சம்பந்தமான தகவல்களை இந்த Wifi-ல் பயன்படுத்தும்பொழுது பார்க்கக்கூடாது. முக்கியமான தரவுகளை ஒருபோதும் பரிமாறக் கூடாது. பணம் அல்லது முக்கிய ஆதாரங்களை நாம் பரிமாறும் பொழுது அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்த முடியாது. முக்கியமாக நாம் பயன்படுத்தி ஆக வேண்டும் என்ற சில பயன்பாடுகளை மட்டும் VPN பயன்படுத்தி பயன்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக Paid VPN ஆக மட்டுமே இருக்க வேண்டும்.இது ஓரளவு பாதுகாப்பைக் கொடுக்கும். VPN பயன்படுத்தினாலும் Public wifi-ல்  முக்கியமான தகவல்களை நாம் பரிமாற்றம் செய்யக் கூடாது என்பது ஒரு சைபர் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *