பாகிஸ்தானில் Tiktok அதிரடித் தடை!
Tiktok செயலியானது தேவை இல்லாத பல சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது பாகிஸ்தானிலும் இந்த செயலிக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப் பிரபலமாக செயல்பட்டு வந்த Tiktok செயலியானது தற்பொழுது பல்வேறு விதிமீறல் சிக்கல்களில் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த செயலியில் தொடர்ந்து பல தேவை இல்லாத வதந்திகள் மற்றும் விதிகளை மீறி பல கருத்துக்கள் பரவுவதாலும், ஒவ்வொரு சமூகத்துக்கும் எதிரான பல காணொளிகள் பரப்படுவதாகவும் தொடர்ந்து அதன்மீது குற்ற சாட்டுகள் எழுந்துள்ளன.குறிப்பாக ஆபாச உணர்வுகளைத் தூண்டுவதாக பல பதிவேற்றங்கள் செய்யபடுவதாலும், ஜாதி, இனம், மதம் மொழிகள் சம்பந்தமாகக் கூட பல காணொளிகள் பதிவேற்றபடுகின்றன.
டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய செயலிகள்,பல்வேறு பயன்பாடுகளுக்கு தேவைப்பட்டு கொண்டிருக்கும் பொழுது, இந்த டிக் டாக் செயலி மட்டும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதே இதன் தடைக்கான முக்கிய காரணம் ஆகும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் ஆலோசகரான ஆர்ஸ்லான் காலித், கடந்த ஜூன் மாதத்தில் Tiktok செயலியில் இருக்கும் ஆபாசம் சம்பந்தப்பட்ட பதிவேற்றங்களை நீக்குமாறு பாகிஸ்தானின் PTA-ன் அறிவிப்பை ஆதரித்திருந்தார். ஆனால் தற்பொழுது தொடர்ந்து விதிமீறலுக்கு உட்பட்டு வந்த tiktok செயலி தற்பொழுது பாகிஸ்தானிலும் PTA (Pakistan Telecommunication Authority) மூலம் தற்பொழுது இந்த செயலிக்கு நாடு முழுவதும் தடை விதித்தது.
சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவின் டிக் டாக்கில் இதுபோன்ற பல பிரச்சினைகள் வந்ததால் இந்தியாவில் டிக் டாக் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டது. இந்தியாவில் அதுமட்டுமல்லாமல் பல செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டது. குறிப்பாக இந்த செயலியினுடைய சர்வர்கள் சீனாவில் இருந்ததும், இந்தியாவில் Tiktok தடை செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாகும். எந்த ஒரு செயலிக்கும், இணையதளங்களுக்கும் இணையம் சம்பந்தமான அனைத்திற்கும் குறிப்பிட்ட வரைமுறைகள் உண்டு.
ஆனால் Tiktok செயலியானது ஒரு தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அரசாங்கத்தினுடைய அதிகாரிகள் தெரிவித்ததால் அமெரிக்காவிலும் இந்த செயலி தடை செய்யப்பட்டது. உலக நாடுகளிடையே பல பிரச்சினைகளை இந்த செயலி தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. இந்தியாவில் இந்த செயலியை தடை செய்தது அதன் வணிகத்தை பெருமளவு குறைத்தது குறிப்பிடத்தக்கது.