Linux ஏன் அதிக பயனர்களால் விரும்பப்படுகின்றது?
மற்ற இயங்குதளங்களுக்கும்(OS)-களுக்கும்,Linux-ற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. Linux மற்ற இயங்குதளங்களை விட அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கின்றது.
உலகின் பெரும்பாலான இடங்களில் Windows இயங்குதளம் பயன்படுத்தப் படுகின்றது. இது போன்ற அதிக அளவில் பயன் படுத்துவதால் ஹேக்கர்கள் இந்த இயங்கு தளங்களை அதிகமாக தாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
Linux-ல் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைக்கின்றது. இதனுடைய பாதுகாப்பு அம்சங்கள் மற்ற இயங்கு தளங்களை விட அதிக அளவில் Program செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுளது. ஒருவருக்கு Program தெரிந்திருந்தால் இதில் கொடுக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தேவையின்படி சில விஷயங்களை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். Linux-ல் நாம் நமக்கு தேவையான மென்பொருட்கள் மற்றும் சில வன்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றாலும், நிறைய கட்டளைகளை கடந்த பின்னரே அதனை நிறுவி பயன்படுத்த முடியும். இதனால் நாம் சைபர் தாக்குதல்களிலிருந்து சற்று பாதுகாத்துக்கொள்ள முடியும். மற்ற இயங்குதளங்களை நிறுவ நாம் அதற்கான உரிமம் வாங்க செலவு செய்ய வேண்டும் அல்லது அதனுடைய Crack வெர்சனை பயன்படுத்த வேண்டும். Crack வெர்சனி-ல் உள்ள இயங்கு தளங்களை நிறுவும் பொழுது, சைபர் தாக்குதலுக்கு உட்பட நேரிடலாம்.
நாம் நமது கணினியில் மற்ற இயங்குதளங்களை பயன்படுத்தும்போது சில சமயங்களில் மறுதொடக்கம்(Re-start) செய்ய வேண்டியிருக்கும். Linux-ல் இதுபோன்ற பிரச்சினைகள் கிடையாது. புதுப்பிப்புகள் எளிதாகவும் சீக்கிரமாகவும் கிடைக்கும். Linux-ல் அதிக பயனர்களைக் கூட ஒரே சமயத்தில் தாங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கணினிக்கு கிடைக்கும் அப்டடேட்ஸ்-களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவதால்(Custom Installation) எளிதாகவும், விரைவாகவும் தேவையானதை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து புதுப்பித்துக் கொள்ளள முடியும். விண்டோஸ் போன்ற பிற (Open Source) இயக்க முறைமைகளை விட லினக்ஸ்-ல் நிறுவுதல்(Installation) செயல்முறையானது குறைந்த நேரம் எடுக்கும். மேலும், அதன் நிறுவல் மிகவும் எளிதானது. ஏனெனில் இது குறைந்த பயனர் உள்ளீடு(Input Settings) தேவைப்படுகின்றது. இதற்கு கணினி உள்ளமைவு(Storage) அதிகமாக தேவையில்லை(40 Gb Disk Space போதுமானது). இது குறைந்த உள்ளமைவைக் கொண்ட பழைய கணினிகளில் எளிதாக நிறுவ முடியும்.