ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆயத்தமாகும் மெட்டா நிறுவனம்..!
மீண்டும் பணி நீக்கம் செய்யும் மெட்டா..!
மெட்டா நிறுவனம் சமூக காலமாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தது இதைத் தொடர்ந்து தற்பொழுதும் பணிநீக்கம் செய்வதில் ஆயத்தமாக உள்ளது. பேஸ்புக்கின் நிறுவனம் மெட்டா சமீபத்தில் தான் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
கடந்த ஆண்டு மட்டும் மெட்டா நிறுவனத்தின் பணியாற்றிய ஊழியர்களின் 13 சதவீதம் ஊழியர்களை திட்டமிட்டபடி பணி நீக்கம் செய்துள்ளதாக ஸ்டிரீல் ஜர்னல் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வெளிவந்துள்ள செய்தியின் அடிப்படையில் இரண்டாவது முறையாக பணி நீக்கம் செய்ய தொடங்கினால் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் டெக் நிறுவனத்தில் மெட்டா நிறுவனம் முதன்மை வகிக்கும்.
மிக முக்கியமான செய்தி ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் பொறியியல் அல்லாத மற்ற பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை தற்பொழுது பணிய நீக்கம் செய்யப் போவதாக செய்தி ஒன்றே வெளியிட்டுள்ளது. மேலும் பல மாற்றங்களை மிட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாகவும் பல குழுக்களை அமைத்து மெட்டா நிறுவனத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த போவதாக செய்தி வெளியாகி உள்ளது.