PDF-ஐ பயன்படுத்தி ஹேக் செய்யும் ஹேக்கர்கள்!
சைபர்கிரைம் வல்லுனர்கள் தொடர்ந்து செய்து வந்த ஆராய்ச்சியில் சமீபத்தில் 1,00,000-ற்கும் அதிகாமான இணைய தளங்களில் Malicious-நிறைந்த இணைய தளங்களை ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளனர்.
இவை அனைத்தும் இணையத்தில் Pdf தேடுபவர்கள் மற்றும் அது சம்பந்தமான தகவல்கள் மற்றும் டாக்குமெண்டுகள், மாதிரிகளுக்காக templates- போன்றவற்றை தேடும் வணிக நிறுவனங்களையே இவர்கள் நோக்கமிட்டு செயல்படுவதாகவும் eSentire சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனாளர்கள் தேடிய ஒன்றை தனது இணையப் பக்கத்தில் காண்பிக்கும் இந்த இணைய தளங்கள், அவர் டவுன்லோட் பட்டனை தொட்டவுடன், உடனடியாக வேறு சில இணைய தளங்களுக்கு Re-direct-ன் மூலம் வேறு வேறு இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று Malwares அல்லது Malicious உள்ள பைல்-களை டவுன்லோட் செய்ய வைக்கின்றது.
இதை சற்றும் அறிந்திடாத பயனர்கள் தங்களுக்குத் தேவையான கோப்புகளை பயன்படுத்தத் துவங்குகின்றனர். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வரை பயனர்கள் இப்படி ஒரு தாக்குதல் நடந்து கொண்டிருப்பதை உணர்வதில்லை.
இந்த தீம்போருட்கள் பயனாளர்களின் சாதனங்களில் இறங்கியவுடன், தனது வேலையைத் துவங்க ஆரம்பிக்கின்றது.RAT-என்று அழைக்கப்படும் Remote Access Trojan -ஆக வேலையைத் தொடர்ந்த வண்ணம் பயனர்களின் மீதான தாக்குதலை ஏற்படுத்தத் துவங்குகின்றது.
