PUBG தடை!
பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு என்ன காரணம்? இதை தீவிரமாக விளையாடி வந்தவர்களின் நிலைமை என்னவாகும்? ஒரு தெளிவான பார்வை சைபர்லைட்ஸ்-ல்…
இந்தியாவில் பலரும் சில வாரங்களாக நடக்கக் கூடாதென நினைத்த அந்த சம்பவம்! அதாவது பப்ஜி விளையாட்டை இந்தியாவில் தடை செய்திருப்பது தற்போது நிகழ்ந்திருக்கிறது!

சில வாரங்களாக நிலுவையில் போய்க்கொண்டிருந்த இந்த விளையாட்டின் தடை தற்பொழுது உறுதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் முற்றிலுமாக இந்த விளையாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தம் 118 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கிறது இந்திய அரசாங்கம். இதில் மிகப்பெரிய ஒன்றாக அனைவராலும் கருதப்படுவது PUBG. இது ஓர் மொபைல் விளையாட்டு. இளைஞர்கள் பலர் இதை ஒரு சாதாரண விளையாட்டாக பார்க்காமல் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என நினைத்தனர்.











பல மணி நேரத்தை இதற்காக செலவிடுகின்றனர். நேரத்தை செலவிடுவதோடு மட்டுமல்லாமல், பல பேர் இதில் அதிக அளவில் பணத்தையும் செலவிடுகின்றதாக குற்றங்கள் எழுந்துள்ளன. இந்திய – சீன எல்லைப் பிரச்சனையை தொடர்ந்து இந்திய அரசாங்கத்தால் 59 ஆப்ஸ்கள் முதலில் தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்பொழுது 118 ஆப்ஸ்கள் இந்திய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. இது தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இதனுடைய சில சர்வர்கள் சீனாவில் செயல்பட்டு வருவதால் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்டதாக இந்திய அரசாங்கம் ஒரு செய்தி குறிப்பில் விளக்கியுள்ளது. இது இந்திய நாட்டின் சைபர் குற்றங்களிலிருந்து தடுக்கும் நடவடிக்கை எனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பப்ஜியுடன் சேர்த்து கட் கட், பெய்டு உள்ளிட்ட ஆப்ஸ்களை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்திய-சீன எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து 59 ஆப்ஸ்கள் முதலில் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது 118 ஆப்ஸ்கள் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய நாட்டின் சைபர் குற்றங்களிலிருந்து தடுக்கும் நடவடிக்கை எனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
