240 வாட் சார்ஜிங் கொண்ட ரியல்மி GT 3
இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி GT 3
ரியல்மி நிறுவனம் தனது சேவையை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறது இந்த வகையில் தற்போது ரியல்மி GT 3 ஸ்மார்ட் போனின் டீசரை வெளியிட்டுள்ளது.
இதனுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் GT 3 ஸ்மார்ட்போன் 240 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி தற்போது இந்தியாவில் ரியல்மி GT 3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் நிறைய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
ரியல்மி வெளியிட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட் போனுக்கான டீசரில் வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி GT 3 நிறைந்துள்ள ஏராளமான சிறப்பம்சங்கள்

ரியல்மி வழங்கக்கூடிய இந்த ஸ்மார்ட் போன் 240 வாட் சூப்பர் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது என்றும் மேலும் ரியல்மி GT 3 ஸ்மார்ட் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர realme நிறுவனம் கோகோ கோலா எடிஷன் என்கின்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது.
