உங்க போனில் ஆபத்தான APP உள்ளதா..? அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்க போனில் ஆபத்தான APP உள்ளதா..?
நாம் பயன்படுத்தும் மொபைலில் ஆபத்தான APP மூலம் பல வகையான பிரச்சனைகள் நேரிடும். மொபைலில் தானாகவே டவுன்லோட் ஆகும் APP மூலம் பல ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படும் இவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்,
நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் பலவகையில் நன்மைகளும் செய்கிறது தீமைகளும் செய்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு எந்த வகையில் அதிகரிக்கிறதோ அந்த வகையில் ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளும் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சில நேரங்களில் நம் மொபைலில் சில APP தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு கொண்டிருக்கும். அந்த APP சில நேரங்களில் மொபைலில் ஹிட்டன் செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு ஏற்படுவதன் மூலம் ஒரு நபரின் சொந்த விபரங்கள் என பல மோசடியான விஷயங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு பல ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த கட்டுரையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஹிட்டன் ஆப்ஸ் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது சிறந்தது. இந்த கட்டுரையில் உங்களுக்காக சில டிப்ஸ் வழங்கப்படுகிறது.
குறிப்பு
உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள செட்டிங் பகுதிக்குச் சென்று அதில் ஆப்ஸ் அண்ட் நோட்டிபிகேஷன் என்ற பகுதியில் நீங்கள் உபயோகிக்கக்கூடிய அனைத்து செயல்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். பின்பு See All Apps என்பதை தேர்வு செய்யவும் இங்கே உங்களுக்கு தேவையான Installed Apps, Disabled Apps, Hidden Apps என கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Disable apps என்பதற்குள் சென்றாள் உங்கள் மொபைலில் எந்த Apps Installed செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் நீங்கள் Installed செய்யப்படாத Apps எதுவாக இருந்தாலும் உடனே டெலிட் செய்வது நல்லது.
ஹிட்டன் செயலியை கண்டுபிடிப்பது எப்படி..?
உங்கள் மொபைல் செட்டிங்கில் உள்ள Apps – க்குள் செல்லவும். இங்கு Special App Access என்பது கிடைக்கும் அதை கிளிக் செய்யவும் பின்னர் All Files Access இருக்கும் அதையும் கிளிக் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் இருக்கும் செயலிகளைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் மறைக்கப்பட்ட Apps பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.