தொழில்நுட்பம்

அறிமுகமாகிறது டுவிட்டர் புளூ சேவை – மாதம் ரூ. 650 

புளூ சேவை – மாதம் ரூ. 650 

சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த ட்விட்டர் புளூ சேவையும் அதற்கான கட்டண விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய பயனாளர்களும்  இனிமேல் ட்விட்டர் வழங்கும் புளூ சேவையில் இணைய முடியும்.  பல நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ட்விட்டர் புளூ சந்தா தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

ட்விட்டரில் புளூ  சந்தா  சேவை பெற்றுள்ளவருக்கு புளூ டிக் வழங்கப்படும். ஆன்லைன் மூலமாகவோ  மற்றும் மொபைலில் மாதந்தோறும் சேவை கட்டணம் முறையில் ரூ. 650 மற்றும் ரூ. 900 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வருடாந்திர முறையில் சந்தா செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்படி ட்விட்டர் புளூ  சந்தா சேவையில் கட்டணம் செலுத்துவோருக்கு வருடாந்திர  அடிப்படையில் பெரும் கட்டணம் ரூ. 6 ஆயிரத்து 800 செலுத்தினால் போதும். 

வெரிஃபைட் டேக் பெற வாடிக்கையாளர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் வழங்கப்பட்டு வந்த ட்விட்டர் புளூ  சேவை தற்போது இந்தியா, இந்தோனேஷியா என 15 நாடுகளில் தற்போது வெளியிடப்பட்ட வருகிறது. ட்விட்டர் புளூ  சந்தா சேவை பெறுவோருக்கு பலவிதமான சலுகைகளை ட்விட்டரில் வழங்கப்படுகிறது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *