ஐரோப்பிய வங்கிகளை குறிவைக்கும் புதிய மால்வேர்கள்!
Cleafy-ஐச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள்(Cybersecurity Researchers) புதிய டீபாட்(TeaBot) என்ற மால்வேரை(Malware) கண்டறிந்துள்ளனர்.
இதனை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய தீம்பொருள்(Malware), கண்டறியப்பட்ட பிற வங்கி ட்ரோஜன்களிடமிருந்து(Trojan) அதன் தனித்துவத்தை தெளிவுபடுத்துவதற்காக இதற்கு டீபாட்(TeaBot) என்று பெயரிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சுருக்கமாக, டீபாட்(TeaBot) என்பது ஒரு பொதுவான ஆண்ட்ராய்டு வங்கி ட்ரோஜன்(Trojan) ஆகும். இது பயனர்களின் தகவலகள் மற்றும் மோசடிகளை நடத்த எஸ்எம்எஸ்(SMS) ஆகியவற்றை திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தீம்பொருள்(Malware) தற்போது குறிவைத்துள்ள 60-க்கும் மேற்பட்ட வங்கிகளின் முன் வரையறுக்கப்பட்ட பட்டியலைக் கொண்டு தாக்குதலை நடத்த குறிவைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைப் நடத்த, இந்த தீம்பொருள் முறையான பயன்பாட்டைப் போலவே முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சாதனத்தை அடைகின்றது. ஆரம்பத்தில், இந்ததீம்பொருளின் பயன்பாடு “Teatv” என்ற பெயரைக் கொண்டுள்ளது.
பின்னர், இது ஆண்ட்ராய்டுAndroid பயனர்களை ஏமாற்றுவதற்காக “DHL“, “Mobdro” மற்றும் “UPS” போன்ற இன்னும் சில பெயர்களை ஏற்றுக்கொள்வதோடு, பெயரை “Vlc Media Player” என்று மாற்றிக் கொள்கின்றது.
ஒரு சாதனத்தை அடைந்ததும், தீம்பொருள் பல்வேறு அனுமதிகளைத் தேடுவதன் மூலம் தன்னுடைய செயல்பாட்டை நிலைநிறுத்துகின்றது. செய்திகளுக்கான அணுகல், தொலைபேசி புத்தகம், ஆடியோ அமைப்புகள், சாதன பயோமெட்ரிக் முறைகள் மற்றும் பிற பயன்பாடுகளை வரையவும் மற்றும் Android அணுகல் சேவை ஆகிய அனைத்தும் இதில் அடங்கும்.
இந்த சலுகைகளுடன், கீலாஜிங் நிறுவப்பட்ட பயன்பாடுகளின் பட்டியலைப் பிரித்தெடுப்பது (இலக்கு வங்கியினுடைய பயன்பாட்டின் இருப்பை சரிபார்ப்பதற்காக), மொபைலில் உள்ள ஸ்கிரீன் ஷாட்களை எடுத்துக்கொள்வது மற்றும் மேலடுக்கு தாக்குதல்களைச் செய்வது போன்ற தரவைத் திருட தீம்பொருள் பல்வேறு தீங்கிழைக்கும் செயல்களை நடத்த ஆரம்பிக்கின்றது.