சமூக ஊடகப் பிரச்சனைகளை தீர்வு காண வந்தது புதிய இணையதளம்
குவியும் புகார்கள்
இந்தக் குழு அமைக்கப்பட்ட நோக்கம் என்னவென்றால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் இணையதளம் மற்றும் வலைதளங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையானதாகவும் இருக்கின்றதா என்பதை இந்த குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வலைதளங்கள் மீது மக்கள் எழுப்பும் புகார்களையும் தொடர்ந்து விசாரித்து அதற்கு தீர்வு தருகிறது.
வலைதளங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும் புகார்களையும் இந்த இணையதளத்தை பதிவிடலாம் என்றும் அதற்கான ஒரு இணையதளத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சமூக ஊடகப் பிரச்சனைகளை கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை பயன்படுத்தி உங்களுடைய வலைதள பிரச்சினைகளை பதிவு செய்யலாம்… “https://gac.gov.in இந்த இணையதள லிங்கில் சமூக ஊடக பிரச்சனைகளை பதிவு செய்தால் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வு கொடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் கூறியுள்ளார்