இணையதள குற்றங்கள்

இந்த SMS Link தொட்டா மொத்தமும் போயிடும்…உஷார் மக்களே..!

உஷாரா இருங்க மக்களே உஷார்..!

சமீப காலத்தில் மும்பையில் ஆன்லைன் மோசடிக்காரர்கள் தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு SMS ஒன்றை அனுப்பி வைத்தனர். அப்பொழுது வாடிக்கையாளர்களின் KYC / PAN தகவல்களை தெரிவிக்கவில்லை என்றால் உங்களது வங்கிக் கணக்கை முடக்கி விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் மோசடி தெரியாத அந்த வாடிக்கையாளர்கள் அவர்கள் அனுப்பிய SMS லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட அவர்களின் சுய விபரங்களை பதிவு செய்தனர்.  

இதைத்தொடர்ந்து வங்கியிலிருந்து  மேல் அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து அவர்கள் தொலைபேசிக்கு ஒரு OTP வருவதாகவும் அதை உடனே தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். 

OTP பதிவு செய்த உடனே அவர்கள் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் மாயமாகிவிட்டது.

இவ்வாறு ஒரே நாளில் தனியார் வங்கி ஒன்றில் வங்கி கணக்கு வைத்துள்ள 40 வாடிக்கையாளர்களின் இலட்சக்கணக்கான  பணங்கள் ஒரே நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மும்பை போலீசார் விசாரணை செய்து வருகின்றன. இந்த மோசடிக்கு பின்பு பல வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் எந்த ஒரு SMS லிங்க் வந்தாலும் அதை கிளிக் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *