இணையதள குற்றங்கள்

Google pay பயனாளர்களே இனிமேல் உஷாரா இருங்க…!

ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்பவர்கள்  கவனத்திற்கு

இந்தியாவின் ஆன்லைன்  பண பரிவர்த்தனைக்கு  google pay, paytm, phonepe ஆகிய செயல்களை பொதுவாக பயன்படுத்தி வருகிறோம். இந்த டிஜிட்டல் உலகத்தில் இதுபோன்ற ஆன்லைன் செயலிகள் இருப்பதன் மூலம் மக்கள் பண பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாகி விட்டது. 

இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் கடைகளுக்குச் சென்று எந்த ஒரு பொருட்கள் வாங்கினாலும் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தி விட்டு வருகின்றன. நேரங்களை அச்சப்படுத்துவதற்கு இது போன்ற ஆன்லைன் செயலி மிகவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. 

கூகுள் பே செயலி பல நன்மைகளை செய்தாலும் பலவிதத்திலும் மோசடிகளும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினரும் பல வகைகளில் எச்சரித்து வருகின்றனர். 

மக்கள் பொதுவாக பயன்படுத்தும் கூகுள் பே செயலி மூலம் பல நூதன மோசடிகளில் இறங்கி உள்ளதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. நூதன மோசடி செய்யும் நபர் நம் வங்கி கணக்கிற்கு தெரியாமல் பணத்தை அனுப்பி விட்டதாக சொல்லி பணத்தை அனுப்பி முதலில் பின்பு அந்த பணத்தை பெறுவதற்கு ஏதாவது  லிங்க் அனுப்பி அந்த லிங்கின் மூலம் பணத்தை திரும்ப செலுத்துமாறு கேட்டு வருகின்றன இதன்மூலம் அந்த கிளிக் செய்வதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணம்மும் பறிபோய் விடுகிறது. 

குறிப்பு:- உங்களது UPI பின்னை எப்பொழுதும் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *