96% இந்தியர்கள் போலியான மற்றும் தேவையில்லாத Sms களை பெறுகின்றனர்
96% இந்தியர்கள் போலியான மற்றும் தேவையில்லாத Sms களை பெறுகின்றனர்
சென்ற வருடம் Telecom Regulatory Authority of India இதுபோன்ற வதந்தி பரப்பிகள் மற்றும் தேவையில்லாத தகவல் பரிமாற்ற நிறுவனங்கள் மீது கடும் அபதாரம் விதித்தது ஆனாலும் இதில் செய்திகள் அதிக மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கப்படுவதால் இந்த நிறுவனங்கள் இன்னும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
அதிலும் பெரும்பாலான மக்கள் தங்கள் செல்போன் நிறுவங்களிடம் இருந்தே இதுபோன்ற தேவையில்லாத செய்திகளை பெறுகின்றனர்.

நீங்கள் தனிமையில் இல்லை…
உங்கள் ஒவ்வொரு செயல்பாடுகளும் வியாபார நோக்கில் கண்காணிக்கப்பட்டு அது தொடர்புடைய நிறுவனக்களுக்கு உங்கள் செயல்பாடுகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த கணமே உங்களுக்கான குறும் தகவல் தயாராகி உங்கள் கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படுகிறது.
இதை தனி மனிதர்கள் யாரும் செய்வதில்லை இவற்றை கண்காணிக்கும்படியான செயல்முறைகள் கணினியில் பதிவேற்றப்பட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் 96%இந்தியர்களின் கைபேசிக்கு குறைந்தது 7 முதல் 10 sms அனுப்பப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே வியாபார நோக்கில் தான்.

DNS சேவையில் இணைந்தால் கூட வெறும் 6% மட்டுமே!
சர்வேயின் படி 12,000 ற்கும் அதிகமான செய்திகள் ஓரிரு எழுத்துகளிலேயே பெறப்படுகின்றன. அதாவது AB , ABC போன்று இதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. ஏன் அது அவர்களுக்கே தெரியாது.

சென்ற வருடம் ஜூன் மாதம் இதுபோன்ற போலிகள் மற்றும் வதந்திகளை அனுப்பும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மார்கெட்டிங் ஏஜென்ட்கள் போன்றவற்றிற்கு கடும் அபதாரம் விதிக்கப்பட்டதுடன் அவைகளை DND List “do not disturb” ல் சேர்த்தது ஆனாலும் அதே நிறுவனங்கள் சிலவும் மீண்டும் இந்த செயலை செய்து வருகிறது.
வாடிக்கையாளர்களாக DNS சேவையில் இணைந்தால் கூட வெறும் 6% மட்டுமே!
.
சென்ற வருடம் Telecom Regulatory Authority of India இதுபோன்ற வதந்தி பரப்பிகள் மற்றும் தேவையில்லாத தகவல் பரிமாற்ற நிறுவனங்கள் மீது கடும் அபதாரம் விதித்தது ஆனாலும் இதில் செய்திகள் அதிக மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கப்படுவதால் இந்த நிறுவனங்கள் இன்னும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
அதிலும் பெரும்பாலான மக்கள் தங்கள் செல்போன் நிறுவங்களிடம் இருந்தே இதுபோன்ற தேவையில்லாத செய்திகளை பெறுகின்றனர்.

உங்க மொபைலுக்கு 1 கோடி பரிசு..

நீங்கள் ஒரு மொபைல் பயன்பாட்டாளராக இருந்தால் இதுபோன்ற SMS களை ஒருமுறையேனும் பார்த்து இருப்பீர்கள். சரி இந்த முறையை ஏன் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்?
- SMS செலவு மிக குறைவு
- SPAM களை கட்டுப்படுத்த ஒரு முறையான வரையறை கிடையாது
- ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களிடம் தகவலை கொண்டு சேர்க்கலாம்
- 100 ல் ஒருவர் இந்த செய்திகளை நம்பி விடுகிறார்கள்
- ஒரு பகுதியை மையமாக கொண்ட அனைவருக்கும் ஒரே செய்தியை அனுப்ப முடியும்
- அடையாளத்தை மறைத்து செய்தி அனுப்ப முடியும்
- என்ற காரணங்களால் இவர்கள் spam மழையாக பொழிகின்றனர்.
இவர்கள் போன்ற போலி பரப்பிகளால் சில உண்மையான வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் அரசு சார்பில் அனுப்பப்படும் தகவல்கள் , வானிலை மற்றும் பேரிடர் அபாய எச்சரிக்கை தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவை மக்களால் புறக்கணிக்கப்படுகிறது,