Malware என்றால் என்ன?
மால்வேர் என்பது வைரஸ்கள், ரேன்சம்வேர்கள், உள்ளிட்ட கணினி மற்றும் மொபைல் சாதனத்தின் அனுமதி இன்றி இயங்கக் கூடிய அல்லது வேறு சில தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள் ஆகும்.

இது ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டு பரப்பபடுகின்றது அல்லது மென்பொருள் உருவாக்குபவர்களிடமிருந்து வாங்கப்பட்டு ஹேக்கர்களால் செயல்படுத்தப் படுகின்றது.
மால்வேரில் தீங்கு இழைக்கக் கூடிய ரிமோட் செயலி போன்று தகவல்களை பரிமாறும் அல்லது சாதனத்தை சேதமடைய செய்யக்கூடிய முறைப்படுத்தப்பட்ட கோடிங் ஆகும்.

Malware Coding
ஒரு சாதனத்திற்கு உள் நுழைந்த பிறகு இது பல செயல்களை செய்ய ஆரம்பிக்கின்றது. அந்த சாதனத்தின் டேட்டாக்களை வேறு ஒரு சாதனத்திற்கு பரிமாற்றம் செய்கிறது அல்லது அந்த சாதனத்தை தாக்கத் தொடங்குகிறது. அல்லது அதிகப்படியான விளம்பரங்களை நம்மிடம் காண்பிக்கவும் சில மால்வேர்கள்(adwares) செயல்படுகின்றன
இந்த வைரஸ்களில் பல வகைகள் உண்டு
வைரஸ்
வயர்லெஸ் மால்வேர்
ஸ்பைவேர் (Spyware)
ட்ரோஜன் (Trojan)
ரூட்கிட்(Rootkit)
பைல்லெஸ் மால்வேர்(Fileless Malware)
இது எப்படி மற்றும் கணினிக்குள் செல்கின்றது?
இவை பெரும்பாலும் இமெயில் வழியாக சாதனத்திற்குள் சென்று விடுகின்றது. இமெயில் மட்டுமல்லாது முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் நாம் மேற்கொள்ளும் தேடல்கள் அல்லது பதிவிறக்கங்கள் மூலம் மால்வேர்கள் உள்ள பகுதியை நாம் பயன்படுத்தும் பொழுது இவை நம் கணினி அல்லது மொபைலுக்குள் நுழைகின்றன.
