WhatsApp hack have I been affected and what should I do?
Whatsapp பயன்பாட்டாளர்களுக்கு ஆபத்து!

உலகின் 180 நாடுகளில் மொத்தம் 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் 200 million மக்கள் பயன்படுத்தி வருவதாக சில அறிக்கைகள் கூறுகின்றனர்.
பேஸ்புக் நிறுவனம் வாட்சப் Whatsapp செயலியை வாங்கியது முதலாக பல அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு உள்ளன. அப்போது பதிலளித்த வாட்சப் நிறுவனம் இந்த ஆப்ஆல் எங்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை என்கிறது. ஆனாலும் தொடர் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தும் புதிய பயன்பாடுகளை இணைத்தும் தன் வாடிக்கையாளர்களை தன்வசமே வைத்துள்ளது
whatsapp ல் ஊடுருவிய ஹேக்கர்கள்.
வாட்ஸ்ஆப் குறித்த வதந்திகள் அனுதினம் பெருகிவரும் சூழ் நிலையில் தற்பொழுது உலக மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று அந்த வதந்திகள் உண்மையானதுதான்.
சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஹேக்கர் குழுமம் Whatsapp ல் சில Malicious code களை பயன்படுத்தி Whatsapp ன் பாதுகாப்பு செயல்முறைகள் குறைவாக உள்ள Status மற்றும் Video call போன்றவற்றில் உள்ள Backdoor களை பயன்படுத்தி பயனாளர்களின் கைபேசிக்குள் நுழைந்து விட்டனர்.

அவசர கால எச்சரிக்கை
Whatsapp பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனக்கு லாபம் இல்லாத நிலையிலும் தொடர் அப்டேட்களை கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் என்னதான் பாதுகாப்பு வழிமுறைகளை செய்தாலும் அதற்கு நிகரான பாதிப்பை ஏற்படுத்தும் Malicious code களை ஹேக்கர்கள் உருவாக்கி Whatsapp செயலியை முடக்க முயற்ச்சி செய்து வருகின்றார்.
இதனால் வாட்ஸ்அப் செயலி குறித்த செய்திகளை தெரிந்து கொள்வதோடு Whatsapp அப்டேட்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிறது Whatsapp நிர்வாகம்.
Whatsapp ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

உங்கள் செயல்பாடுகள் இன்றி உங்கள் கைபேசி செயல்படுவதை உணர்ந்தாலோ அல்லது பயன்பாடு இல்லாத நிலையிலும் அதிக டேட்டா செலவு மற்றும் கடும் வெப்பத்தை உணர்ந்தாலோ உடனடியாக இணைய இணைப்பை துண்டிக்க வேண்டும்.
மீண்டும் இதே நிலை தொடரும் பட்சத்தில் உங்கள் செயலியை RESET செய்துவிட்டு உங்கள் கைபேசி நிறுவனத்திடம் கொடுத்து Service செய்துகொள்ள வேண்டும்.
மேலும் இன்னும் பாதிப்படையாதவர்கள் தொடர் அப்டேட்களை செய்வதோடு Automatic Update களை செயல்படுத்திவிட வேண்டும் .
Playstore மற்றும் istore களில் இருந்து மட்டுமே Whatsappசெயலியை Install செய்ய வேண்டும்.
மேலும் Whatsapp Addonகளை நிறுவாமல் இருந்தாலே பெரும்பாலான பிரட்சனைகள் குறையும் என்கிறார்கள் .
