இணையதள பாதுகாப்பு

ஃபேஸ்புக் பார்க்கவும் ஆதார் வேணும்….

போலி சமூக வலைத்தள கணக்குகளை முடக்க முதல் ஆளாக நிற்கும் தமிழக அரசு.

சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாக அரசுக்கு மிக நெருக்கடியை தருவது சமூக வலைத்தளங்களே! அதுவும் இந்த போலி கணக்குகள் வரைமுறைகளை மீறிய பல்லாயிரக்கணக்கான பதிவுகளை அனுதினமும் பதிந்துகொண்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஆதார் இணைப்பை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு Fake Idக்கள் தான் முக்கிய கருவியாக உள்ளன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது நல்லது தான்.

போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக வன்முறையை தூண்டும் வதந்திகளையும் போலி செய்திகளையும் கட்டுப்படுத்தலாம் அல்லது அரசுக்கு எதிராக பதிவிடும் பயனாளர்களை எளிதில் இனம்கண்டு தண்டிக்கலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல்களையும் அரசு கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும்.


சைபர்லைட்ஸ் பார்வையில்

போலி கணக்குகளை கட்டுப்படுத்துதல் என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால் பின்வரும் நிலைகளை அரசு எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறியே!

முதலாவதாக அரசு  அனைத்து Social Media நிறுவனத்திருக்கும் ஆதார் தகவல்களை வழங்க போகிறதா?

பேஸ்புக் போன்ற உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களே டேட்டா லீக், தகவல் திருட்டை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் ஆதார் தகவல்களை கொடுத்தால் அவை எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்?.

இதுகுறித்து சைபர்லைட்ஸ் இரு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கட்டுரையை படிக்க .

இந்தியர்களின் தனிநபர் விவரங்களை சில ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக்கொண்டு இருக்கும் வலைதளங்கள் போன்றவற்றையே முடக்க முன்வராத நிலையில், வங்கி கணக்கு முதல் கேஸ் இணைப்பு வரை அதைத்தும் தொடர்புடைய ஆதார் தகவல்கள் வெளிவரும் பட்சத்தில் இதில் பிரட்சனை ஏதும் வராதா?

இந்தியர்களின் தனிநபர் விவரங்களை விற்பனை செய்யும் இனியதளம் பற்றிய கட்டுரை- படிக்க.

இதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளம் என்பது சமூகத்திற்கான குரலாக இருக்க வேண்டுமே தவிர அது ஒரு குறிப்பிட்ட அரசிற்கான குரலாக இருக்க குடாது.

அப்படி இருக்க வேண்டும் என்றால் அரசே சமூக வலைத்தளம் நடத்தினால்தான் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *